Woman hangs herself near Perambalur in the middle of the night!
பெரம்பலூர் அருகே பெண் ஒருவர் தூக்குமாட்டி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், ஜெகன் மனைவி ரஞ்சனிதேவி (33). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ரஞ்சனிதேவி மனமுடைந்த நிலையில், வீட்டில் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரஞ்சனிதேவி உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த ரஞ்சனிதேவி குழந்தை இல்லாத ஏக்கத்தில், தற்கொலை செய்து கொண்டதும், தற்கொலைக்கு முன்பாக, தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என வீடியோ எடுத்து உள்ளதையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.