Woman killed while trying to spit from running bus in Perambalur
பெரம்பலூரில் ஓடும் பேருந்தில் இருந்து எச்சில் துப்ப முயன்ற பெண் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூரிலிருந்து பொன்னகரம் செல்லும் நகரப்பேருந்து இன்று மதியம் சுமார் 65 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பேருந்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த, கார்குடியை சேர்ந்த முருகன் மனைவி பேச்சியம்மாள், எச்சில் துப்புவதற்கு படிக்கட்டு அருகே வந்து எச்சில் துப்ப முயன்றார். அப்போது நிலை தடுமாறிய பேச்சியம்மாள் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். அவருக்கு தலையின் பின் பக்கம் மற்றும் மூக்கு , வாய் , கை , கால் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த, பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடலை கைப்பற்றி , பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தை திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டுனராகவும், மேலப்புலியூரை சேர்ந்த சுப்பிரமணியன் நடத்துனராகவும் பணியில் இருந்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவ செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.