
திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில், இரவு பணியிருந்த பெண் காவலருக்கு முத்தமிட்ட வீடியோ காட்சிகள் வெளியான சம்பவத்தில் தேடப்பட்டு வரும் அக்காவல்நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை போலீசார், வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வரும் வேளையில் அவருடன், அப்பகுதியில் தொடர்பில் மற்றொரு பெண்ணும் அவருடன் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளதால் காவல் துறையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனுக்கு சொந்த ஊரான உய்யக்கொண்டான் திருமலை அருகே உள்ள கொடாப்பு கிராமம். அதே ஊரைச் சேர்ந்த திருமணமான 37 வயதுப் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், தற்போது ராஜபாளைத்தில் அருகே தோட்டத்தில் தஞ்சம் புகுந்து இருப்பாதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. சோமரசம்பேட்டை காவல் துறையினர் ராஜபாளையம் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.