Woman President Report to S.P of Police; Union Councilor abusive sitting in the chair of the Panchayat President, near in Perambalur.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பாடாலூர் ஊராட்சி. அந்த ஊரை சேர்ந்த பெண் தலைவர் நாகஜோதி என்பவர் எஸ்.பியிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பாடாலூர் ஊராட்சியின் ஒன்றிய (அதிமுக) கவுன்சிலரான கே.விஜயபிரபு என்பவர் தன்னுடைய பணியில் குறுக்கீடு செய்யும் நோக்கத்தில் பாடாலூர் ஊராட்சி மன்ற அலுவலத்திற்கு வந்து, அத்துமீறி தன்னுடைய நாற்காலியில் அமர்ந்து கொண்டு யாருடைய அனுமதி இல்லாமல் பைல்களை எடுத்து திருத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும், மக்கள் மத்தியில் அவப்பெயர் தனக்கு உண்டாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், அருவருக்க தக்க வார்த்தைகளால் பேசுவதோடு மட்டுமின்றி, தன் சாதி பெயரையும் சொல்லி தரக்குறைவாக திட்டுகிறார். என்றும், அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது, உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள், யாருக்கும் பயப்படமாட்டேன், எனக்கு யாரையும் கண்டு பயமில்லை என்று கூறுவதோடு, அவருடைய அணுமுறை மிகவும் மூர்க்கத்தனமாக ( சைக்கோ போல) இருக்கிறது. ஊர் பெரியவர்கள், பஞ்சாயத்து துணைத் தலைவர், மற்றும் வார்டு உறுப்பினர்கள், யார் சொல்லியும் கேட்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தினருக்கு தெரிவித்த தகவலின் பேரில், அவர்கள் வந்த பின்னரே அவர் இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். பெண் தலைவரான தனக்கு அவரிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் விஜயபிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒன்றிய கவுன்சிலர் விஜயபிரபு இடம் பேசியபோது தெரிவித்ததாவது:

மூர்க்கத்தனமாக நடந்து கொண்டேனா என எனக்குத் தெரியாது. நான் மூர்க்கத்தனமாக (சைக்கோ போல்) நடந்து கொள்பவனா என்பதை ஊர் மக்களிடம் விசாரித்தால் தெரியவரும். நான் ஒரு சின்ன காரணத்திற்காக அந்த விசயத்தை செய்தேன். சேரில் அமர்ந்தது உண்மைதான். பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் குடிநீர், சாக்கடை பணிகள் தொய்வு இருந்தது. ஒருவரை குறை சொல்லி நமக்கு நல்ல பெயர் வேண்டாம். மேலும், சாதி பெயரை சொல்லி நான் திட்டவேயில்லை என்றும், தலைவரான நாகஜோதிக்கு நாற்காலியில் அமரும் முழு உரிமையும் உள்ளது. அவரது கணவருக்குத்தான் இல்லை. என்னைப் பற்றி வீண் வதந்திகளை உருவாக்குகிறார். அதற்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என தெரிவித்தேன். பெண் தலைவரான நாகஜோதிக்கு மரியாதை கொடுத்தேன். என்னை திட்டினார், பின்னர் வல்கராக திட்டிவிட்டேன் என தெரிவித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீடியோ காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!