Women affected by family violence, dowry and sexual harassment may petition in Perambalur!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி ( ஓய்வு) 28.11.2019 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை குடும்ப வன்முறை வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தோந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகிறார். ஆகவே, பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வர்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.