Women direct appeal to Perambalur Collector to eradicate liquor!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், திம்மூர் கிராமத்தில், அரசு பேருந்து தொடக்க விழாவில் கலந்து கொள்ள சென்ற, கலெக்டர் கற்பகத்திடம், பெண்கள், ஒன்று திரண்டு, திம்மூர் கிராமத்தில், சாராயம் விற்கப்படுவதகாவும், அதோடு, கள்ளத்தனமாக டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுப்புட்டிகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும், பெண்களுக்கு, ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும், குளியல் அறைகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதைக் கேட்டுக் கொண்ட கலெக்டர் கற்பகம் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
முன்னாதாக அங்கிருந்த, அங்கன் வாடி மற்றும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். புல், பூண்டுகள், கற்கள் கிடப்பதை பார்த்து அகற்ற உத்திரவிட்டார். பள்ளி வளாகம் தூய்மையாக இல்லாவிட்டால், அடுத்த முறை வரும் போது தலைமைஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன், வட்டார வளர்ச்சி அலுவலரை பள்ளி வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கொடுக்க உத்தரவிட்டார்.