Women self help group interested in running a fish shop can apply: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் -1ன் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் சின்னாறு உபவடி நிலப்பகுதியில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை அங்காடி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

மீன்துறை மூலம் நீர்வள நிலவள திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையிலும் மீன்விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் அரசின் தொலைநோக்கு பார்வையுடன் வழங்கப்பட்ட மீன் அங்காடியை மகளிர் சுய உதவிக்குழுவினால் எடுத்து நடத்துவதற்கு விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்.234, இரண்டாவது மேல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்-621 704 என்ற முகவரியில் உள்ள அலுவலகம் மற்றும் மீன்துறை ஆய்வாளர் அலுவலகம், எஸ்.கே.சி. காம்பளக்ஸ், மேல்தளம், பெரம்பலூர்- 621 212 என்ற முகவரியில் உள்ள அலுவலகங்களை நேரிலோ, 04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலோ adfariyalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!