Women Self Help Groups can apply to set up Madhi Angadi: Perambalur Collector Info!

மதி அங்காடி

பெரம்பலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்திடும் பொருட்டு “மதி அங்காடி” அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டாரம் செட்டிகுளம் ஊராட்சி மற்றும் வேப்பந்தட்டை வட்டாரம் வாலிகன்டபுரம் ஊராட்சியில் “மதி அங்காடி அமைத்திட” கீழ் கண்ட நிபங்தனைகளுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மகளிர் சுய உதவிக் குழு, ஊராட்சி அளவிலான, பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். மகளிர் சுய உதவிக் குழு தேசிய ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும். மாற்றுதிறனாளி, நலிவுற்றேர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் ஒரு வங்கி கடண் இணைப்பாவது பெற்று இருத்தல் வேண்டும். சுய உதவிக் குழு தொடங்கி ஒரு ஆண்டாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக் குழு மீது எவ்வித புகார்களும் இருக்க கூடாது. மகளிர் சுய உதவிக் குழு, கூட்டமைப்பிற்கு அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் சுழற்சி விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

எனவே, மேலே குறிப்பிட்டுள்ள தகுதி உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25.08.2023 க்குள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் எனவும், மேலும் விபரங்களுக்கு 04328-225362 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!