Women’s Entitlement Amount: 79% Enrollment in First Day Camp in Perambalur District!
பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1,93,370 எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் கட்ட முகாம்கள் இன்று (24/7/2023) முதல் 4/08/ 2023 வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் விண்ணப்ப பதிவு முகாமிற்கு எந்த குடும்ப அட்டைதாரர் என்றைக்கு வரவேண்டும் என்றும் எந்த நேரத்தில் வரவேண்டும் என்றும் அவரவருக்கு டோக்கன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட முகாமின் முதல் நாளான இன்று 14,580 விண்ணதாரர்கள் விண்ணப்பங்களுடன் பதிவு முகாமிற்கு வர நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் இன்று 11,476 விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 79 சதவீதமாகும்.
பெண்கள் ஆர்வமுடன் தங்கள் பகுதிகளில் நடைபெற்ற விண்ணப்ப பதிவு முகாமில் பங்கேற்றுள்ளனர். மகளிர் உரிமைத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதற்கு இந்த விண்ணப்ப பதிவே சான்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.