Women’s Entitlement Scheme: In Perambalur, Minister Sivashankar launched it by distributing it to 2,000 people.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான நேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார். கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 50 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 62ஆயிரத்து 476 விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு இல்லாத மற்றும் வங்கி கணக்கு செயலில் இல்லாத 2,715 பயனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் புதியதாக வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வங்கிகள் மூலம் 7,823 பணம் எடுக்கும் அட்டைகள் (ATM CARD ) வரப்பெற்றதில், அமைச்சர் சிவசங்கர் 2,000 பயனாளிகளுக்கு பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ந.கிருஷ்ணமூர்த்தி(ஆலத்துார்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மீனா அண்ணாத்துரை(பெரம்பலூர்), மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி , பேரூராட்சி தலைவர்கள் குரும்பலூர் சங்கீதா ரமேஷ், பூலாம்பாடி பாக்கியலட்சுமி, அரும்பாவூர் வள்ளியம்மை , லெப்பைக்குடிக்காடு ஜாகீர்உசேன், மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள் பாஸ்கர், கருணாநிதி, மகாதேவி ஜெயபால், நகராட்சித் துணை தலைவர் ஹரிபாஸ்கர், வங்கி பணியாளர்கள் மற்றும் அனைத்து முதல்நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!