Women’s Rights Amount: Must Do What Was Said in Elections: Perambalur MP Parivendar interview!
ஐஜேகே நிறுவனரும், பெரம்பலூர் எம்.பியுமான பாரிவேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
மகளிர் உரிமைத்தொகை என்பது தேர்தலுக்கு முன்னால் இன்றைய அரசு அறிவித்தது. ஆனால், அறிவித்து 2 வருடம் கொடுக்கவில்லை. இப்பபோதூன் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த வார்த்தை வேறு, தற்போது செய்கிற நிலை வேறு,
தேர்தலுக்கு முன்பு, ரேசன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தனர். இப்போது சுமார் 2 கோடி 30 லட்சம் பேர் உரிமைத் தொகையை வெறும் ஒரு கோடி மக்களுக்கு, சுருக்கி விட்டார்கள். அதை வாங்குவதற்கு இதெல்லாம் கண்டிசன், அது இருக்க கூடாது, இது இருக்க கூடாது என பலப்பல கண்டிசன் போடுகிறார்கள். ஒரு வேளை இதை சொல்லி இருந்தால், உரிமைத் தொகைக்காக யாரெல்லாம் நம்பி ஓட்டு போட்டார்களோ, அவர்கள் ஓட்டு போட்டு இருக்க மாட்டார்கள். சொல்லும் வார்த்தையை காப்பற்ற வேண்டும், முடியவில்லை என்றால் விட்டு விடவேண்டும்.
தேர்தல் நேரங்களில், என்ன முடியும் கஜானா என்ன என்பது பற்றி எல்லாம் அரசியல் தலைவர்களுக்கு கவலையில்லை. அன்றைக்கு மக்களை கவர என்னமோ சொல்லிவிடுகிறார்கள். பெரும்பாலானவை தேர்தல் நேரத்தில் சொல்லப்படுவது செய்வதில்லை உண்மை என பேசினார்.
முன்னதாக, எறையூரை சேர்ந்த நரிக்குறவ சமூகத்தை ஒரு பிரிவினர் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் மூலம், கலெக்டரை சந்தித்தினர். அதில் அவர்களுக்கு அரசு கையகப்படுத்தும் நிலத்தில் உரிமை கோரியும், உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை முன் வைத்தனர். அ அதற்கு கலெக்டர் கற்பகம், உரியவர்களுக்கு உரிய நடவடிக்கை அரசு வழிகாட்டுதல் செய்யப்படும் என தெரிவித்தார். பேட்டியின் போது ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.