அரும்பாவூரில் மரசிற்ப தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அரும்பாவூர் பேரூராட்சி பாரதி நகரைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் செல்வராஜ்(44), மர சிற்ப தொழிலாளியான இவருக்கு கடந்த சில வருடங்களாக மதுஅருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மது அருந்த தனது மனைவியிடம் செல்வராஜ் பணம் கேட்டதாகவும், மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்வராஜ் நஞ்சு அருந்தி மயங்கினார்.
அங்கிருந்தவர்கள், செல்வராஜை அவரது குடும்பத்தார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து அவசர
சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஹேமலதா(38) அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மது குடித்திட பணம் தர மறுத்து மனைவி கண்டித்ததால் மனமுடைந்து நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்ட செல்வராஜுக்கு மேனகா(19), ஒரு மகளும், சுனில்(14) என்ற மகனும் உள்ளார்.