Worker commits suicide by drinking poison near Perambalur!
பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் செல்வராசு,48, இவர் பெங்களூரில் கூலிவேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் செல்வராசுக்கு இரண்டு காலும் உடைந்ததால் சிகிச்சைக்காக கடந்த 2 மாதத்துக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.
இந்நிலையில் கால்வலி தாங்கமுடியாமல் மனமுடைந்த செல்வராசு கடந்த 12ம் தேதி விஷம் குடித்தார். இதையறிந்த அவரது உறவினர்கள் செல்வராசுவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராசு இறந்தார். இது குறித்து அவரது உறவினர் தங்கதுரை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.