Worker died in the collapse of an iron tail roof near Namakkal
நாமக்கல் அருகே இரும்பு தகர மேற்கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் காவேட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (27). இவர் நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள இரும்புத் தகரத்தினாலான மேற்கூரை விற்பனை செய்யும் கடையில் லோடு மேனாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணியவில் கடையின் உள்பகுதியில் இருந்த தகர மேற்கூரை ஒன்று சரிந்து தியாகராஜன் மீது விழுந்துள்ளது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தியாகராஜன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.