Worker dies after collision with unidentified vehicle in Perambalur
பெரம்பலூர் நகரில் உள்ள எளம்பலூர் சாலையில் கடந்த நவ.30 அன்று மாலை சுமார் 7.50 மணிக்கு நடந்து சென்றவர் அடையாம் தெரியாத வகனம் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை அவ்வழியே வந்த வழிபோக்கர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்கக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த தகவலின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், வாகனத்தில் சிக்கி விபத்திற்குள்ளானவர் சேலம், மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள கிழக்குராஜப்பாளையம் கிராமத்தை சேர்ந்த துக்கையன் மகன் ஜோதிவேல் (வயது 45) என்பதும், பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்தது. மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு சென்ற அவர் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த ஜோதிவேல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை அவரது உறவினர் எடுத்து வந்து கொடுத்த நிலையில் இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.