Workers, farmers, and the general public all protest on behalf of the trade union action committee! Autos not running !!
மக்கள் நலன் காத்திடவும், தொழிலாளர்களின் உரிமைகளை மீட்கவும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை ஒப்படைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு, எல்பிஎப், ஏஐடியுசி, ஹெச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைக்குழு மற்றும் விவசாய சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் வெகுஜன அமைப்புகள் சார்பில் நவ 26 பொதுவேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் அறிவித்தது.
தற்போது நிவர் புயல் காரணமாக 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளதால் மறியல் போராட்டம் தவிர்த்து கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிக்கப்பட்டது. அதையொட்டி பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அகஸ்டின் சிஐடியு, சின்னசாமி ஹெச்எம்எஸ், ராஜேந்திரன் ஏஐடியுசி, ரெங்கசாமி, குமார் எல்பிஎப் ஆகியோர் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் என்.செல்லதுரை, ஏகே.ராஜேந்திரன், ஆட்டோ சங்க நிர்வாகிகள் சி.சண்முகம், ரெங்கநாதன், மல்லீஸ்குமார் சிஐடியு நிர்வாகிகள் பி.ரெங்கராஜ், காசிநாதன் பி.கிருஷ்ணசாமி, மின்ஊழியர் பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரம்பலூரில் உள்ள அனைத்து ஆட்டோக்களும் இயக்காததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.