Workshop conversion in graduate teachers for perambalur district level
பெரம்பலூர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதலுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இக்கலந்தாய்வின் மூலம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வு நடைபெற்றது.
இக்கலந்தாய்வில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடத்தில் காலிப்பணியிடம் ஏதும் இல்லாததால் நடைபெறவில்லை). அறிவியல் பாடத்தில் 12 ஆசிரியர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 3 ஆசிரியர்களும் ஆக மொத்தம் 15 ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்றனர்.
இக்கலந்தாய்வின் மூலம் பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் ஆணையை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) அ.பிரேம்குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அ.மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.