World Book Day Festival on behalf of the Perambalur District Library Department || பெரம்பலூர் மாவட்ட நூலகத் துறையின் சார்பில் உலக புத்தக தின விழா

பெரம்பலூர்: ஏப்.23- உலக புத்தக தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட நூலகத் துறையின் சார்பாக மைய நூலகத்தில் புத்தக தின விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இல்லந்தோறும் நூலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:

மாணவ மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கம் மேம்பட வேண்டும், மண்புழு மண்ணை வளமாக்குவது போல் புத்தக புழுவாக இருப்பவர்கள் மனம் வளமானதாக இருக்கும். பாரதியார் அழியும் செல்வத்தை கொடுத்து அழியாத செல்வமாக தன்னிடம் மூட்டை மூட்டையாக புத்தகங்களை வைத்திருந்தார்.

புத்தகம் இல்லை என்று சொன்னால் சரித்திரம் மௌனமாகிவிடும். எதிர் காலத் தலைமுறை புத்தகங்களை வாசிப்பதன் மூலம் மிகச்சிறந்த அறிவுமிக்க சமுதாயமாக மாறமுடியும் எனவே புத்தக வாசிப்பை பழகிடுங்கள். மேலும் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அனைத்து நூலகங்களுக்கும் இரும்பு நூல் அடுக்குகள் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்புரையாக சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ச.தேவதாஸ் புத்தக உலகம் என்ற தலைப்பிலும், ஊரக வளர்ச்சித் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குநர் கவிஞர் பெரனமல்லூர் சேகரன் சிறப்புரையாற்றினார்கள்.

மாவட்ட கல்வி அலுவலர் (பொ) அம்பிகாபதி , வாசகர் வட்டத் தலைலவர் பி.தயாளன், வாசக வட்டத் துணை தலைவர் க.தமிழ்மாறன் வாழ்த்துரை வழங்கினார்.

குரும்பலூர; பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி பேராசிரியர் அம்மணி வ.சந்திரமௌலி கதை சொல்லி நிகழ்ச்சி நடத்தினார். இவ்விழாவில் முன்னதாக மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன் வரவேற்றார், மாவட்ட மைய நூலக நல்நூலகர் கோ.சேகர் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!