World Environment Day awareness: Perambalur inaugurated collector.
ஆண்டுதோறும் ஜீன் 05 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு, பொதுமக்களிடத்தில் சூற்றுசூழல் குறித்த விழிப்புணர;வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓட்டம், விழிப்புணர்வு பேரணி, கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
காலை 7 மணியளவில் பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். விளையாட்டு வளாகத்திலிருந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பாலக்கரை அருகில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்குபெற்ற, சுற்று சூழல் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் தூய்மையின் அவசியம் குறித்த சுற்றுப்புறத்தை தூய்மையான முறையில் காத்திடுவோம், நமது எதிர்காலத்தை வளமான முறையில் படைத்திடுவோம், குப்பை தரம் பிரிக்கும் பணியினை இன்றே தொடங்குவோம், சுகாதார முறையில் பணியினை நன்றே முடிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணம் நகரை வலம் வந்தனர்.
பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய பேரணி ரோவர் வளைவு, சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. இப்பேரணியில் டோமினிக் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள், வனத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.