World Environment Day celebration held at Kalpadi Government School
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச் சூழல் தலைமை ஆசிரியர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. நெகழி பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்தும், நிலம், நீர், காற்று மாசடைவது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மரம் வளர்ப்பு, நிலத்தடி நீர் மேலாண்மை, நன்னீர் சிக்கனத்தின் பயன்பாடு ஆகியவை செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.