World Investor Conference 2019: Perambalur district level seminar

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் மிகை முன்னோடி மாநிலமாக மாற்றும் பொருட்டு உலக முதலீட்டார்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்க்கும் நோக்கத்துடன் தமிழக அரசு ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு” நடத்த ஆணையிடப்பட்டு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 10.09.2015 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.

பெரம்பலுhர் மாவட்டத்தில் ”உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வு” 08.08.2015 அன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 16 ஆளுஆநு நிறுவனங்களால் ரூ.28.21 கோடி முதலீட்டில் தொழில் துவங்கப்பட்டு 668 நபர்களுக்கு சுய வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 23.01.2019 மற்றும் 24.01.2019-ல் 2வது ”உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2” சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வினை முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தவும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழக அரசின் ஆணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.125 கோடியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் 31.12.2018 அன்று பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பிற மாவட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டு தொழில் துவங்கி பயன்பெறலாம்.

மேலும், இவ்வாறு தொழில் துவங்கும் அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் ”தமிழ்நாடு வணிக வசதியாக்கல் சட்டம் 2017”-ன் படி அனைத்து உரிமங்கள் மற்றும் வரைபட ஒப்புதல் ஆகியவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உற்பத்தி நிறுவனங்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கொள்கை 2008-ன் படி முதலீட்டு மான்யம், குறைந்த அழுத்த மின் மான்யம், மின்னாக்கி மான்யம் போன்ற மான்யங்களும் வழங்கப்படவுள்ளது.

எனவே, அனைத்து தொழில் முனைவோர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முன்வரவேண்டும்.

மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய மேலாளரை நேரிலும், 04328 224595 என்ற தொலைபேசியின் மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!