World Peace Day celebration in Perambalur!
பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் சார்பில் உலக அமைதி தின வேள்வி நடைப்பெற்றது.
ஆங்கில புத்தாண்டையொட்டி பெரம்பலூர் அறிவுத் திருக்கோவிலில் நடந்த உலக அமைதி தின வேள்வி நிகழ்ச்சிக்கு மனவளக்கலை மன்ற பொருளாளர் கருப்பையா தலைமை வகித்தார். யோகா பேராசிரியர் மீரா உலக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வழி செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக அமைதி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உலக அமைதிக்கான வேள்வியை நடத்தினார்.
மன்ற செயலாளர் சாந்தகுமார் உலக அமைதி குறித்து விரிவாக பேசினார். டாக்டர் புவனேஸ்வரி உடற்பயிற்சி மற்றும் தியானத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இதில் மனவளக்கலை மன்ற பொறுப்பாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை பேராசிரியர் ராதாலெட்சுமி வரவேற்றார். துணை பேராசிரியர் ஆறுமுகம் நன்றி கூறினார்.