World Population Day, Awareness Competition: Gift, Certificate for Successful Students

பெரம்பலூர், ஆக.31- ஆண்டுதோறும் ஜுலை 11ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு அந்த மாதம் முழுவதும் குடும்ப நலத்துறை சார்பில் மக்கள் தொகைப்பெருக்கத்தின் விளைவுகளையும், அளவான குடும்பத்தின் நன்மைகளையும் பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மக்கள் தொகைப்பெருக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே “இளம் வயது திருமணத்தால் ஏற்படும் விளைவுகள்”, “பெண் கல்வியும் குடும்ப நலமும்”, “மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் சமூக பொருளாதார விளைவுகள்” உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(பொ) மரு.சசிகலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!