World Saving Day: Perambalur Collector presents prizes to students who win competitions.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சேமிப்பு நாள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற கவிதை, கட்டுரை, ஸ்லோகம் எழுதுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து, தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமையாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்நு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து, சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.

தங்களது சேமிப்புத் தொகையை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான், அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவ்வாறு முதலீடு செய்த பணத்தை தக்க தருணத்தில் திரும்பப் பெற முடியும். தங்களின் எதிர்காலத் தேவைகளில் முக்கியமாக கருதப்படும், பிள்ளைகளின் படிப்பு, திருமணம் மற்றும் வீடுகட்டுதல் போன்ற அத்தியாவசியச் செலவினங்களை கடன் பெறாமல், தங்கள் சேமிப்பிலிருந்தே கௌரவமாக மேற்கொள்ள இயலும்.

எனவே, தமிழக மக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகத்தில் பாதுகாப்பான அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் இன்றே முதலீடு செய்து பயன்பெற வேண்டும் என கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்தார். போலீஸ் எஸ்.பி நிஷா பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!