World Tourism Day Awareness rally in Namakkal: College students staged
நாமக்கல்லில் உலக சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழிப்புணர்வு பேரணி பார்க்ரோட்டில் நடைபெற்றது.
பேரணியை நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி பார்க் ரோட்டில் இருந்து திருச்சி ரோடு வழியாக சென்று கல்லூரியை சென்றடைந்தது. இதில் அரசு கல்லூரி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் சுற்றுலாத்துறை சார்பில் தூய்மை இயக்க வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதனைமுன்னிட்டு ஆஞ்சநேயர் கோயில் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோயில் வளாகம் தூய்மைப்படுத்தும் பணி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோயிலுக்கு குப்பை தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.