Written test for job in Cooperative in Perambalur!
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டார்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் இருபாலர் கல்லூரியில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 387 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்று இத்தேர்வில் 325 நபர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டுறவு சங்க பணியாளர்கள் உடனிருந்தனர்.