Written Test for Secondary Constables at Perambalur; 4294 people wrote!

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 3359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வானது பெரம்பலூர் – அரியலூர் ஆகிய இரு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தேர்வர்களுக்கும் பெரம்பலூர், துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை (CBCID) காவல் துறை தலைவர் அன்பு மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று நடந்தது.

பெரம்பலூர்,அரியலூர் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த ஆண் பெண் இருபாலரையும் சேர்த்து 5212 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆண்கள் 3938 பேர் பெண்கள் 1274 பேர். 3245 ஆண்கள் 1049 பெண்கள் என மொத்தம் 4294 பேர் தேர்வை எழுதினர்.

இதில் 693 ஆண்கள் 225 பெண்கள் என மொத்தம் 918 பேர் தேர்விற்கு வரவில்லை. அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 600 பேர் காவல் துறையை சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்விற்கு வருபவர்களுக்காக காவல் துறை சார்பில் ச.ஷ்யாம்ளா தேவி சிறப்பு பேருந்து வசதி செய்து தரப்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!