You can buy tickets through G Pay, UPI: Transport Minister Sivashankar Interview!

சென்னையில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள யு.பி.ஐ முறையில் பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதோடு படிப்படியாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கும் விரிவு படுத்தப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்..சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சென்னையில் அரசுப்பேருந்துகளில் ஸ்டேட் வங்கி உதவியுடன் கையடக்க கருவிமூலம் UPI முறையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் முறை இரண்டு டிப்போக்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களிலும் இம்முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பின்னர் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து கலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 500 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக100 பேருந்துகளுக்கு டெண்டர்விடப்பட்டுள்ளது எனவும் அடுத்து 400 பேருந்துகளுக்கு டெண்டர் விடப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் இந்த பேருந்துகள் முதலில் சென்னையில் பரிசார்த்த முறையில் இயக்கப்படும் எனவும் பின்னர் படிப்படியாக கோவை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்‌.

மாநில அரசின் நிதியில் புதிய பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு அவற்றில் 100 பேருந்துகளை முதலமைச்சர் தொடங்கிவைத்துள்ளதாகவும் அதற்கடுத்து 150 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து பேருந்துகள் வர வர அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்த அமைச்சர் ஏற்கனவே அறிவித்த 4ஆயிரம் பேருந்துகள் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் 3 ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கு தமிழக முதலமைச்சர் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுல்லதாகவும் அவற்றிற்கும் டெண்டர் கோரப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விபத்து இழப்பீடுவழங்காத அரசு பேருந்துகளை ஜப்தி செய்வதை தவிர்ப்பதற்கான வழிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!