You will make the DMK alliance win. Farmers Workers Party General Secretary S Jagatheesan report!

கட்டுமானத்துறையின் வளர்ச்சிக்காகவும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பல நல்ல திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக செய்து கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு தமிழக மக்கள் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன், என அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற, முர்களால் முதல் வாரியத் தலைவராக நம் தலைவர் பொன்குமாரை அறிவித்த முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்..

தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மேல் மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கு காலை உணவு , மகளிருக்கு இலவச பேருந்து பயணம், போன்ற பல மகத்தான திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் தங்களின் பொன்னான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வாக்களித்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அடிமைகள் கூட்டம் அதிமுகவையும் , சாதி மத வெறி பிடித்த பாசிச பாஜகவையும் தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்.. சர்வாதிகாரம் ஒழித்து நாயகம் காப்போம்.

தலைவர் பொன்குமார் தலைமையில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மண்டல, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தொழிலாளர்கள் இருக்கும் பகுதிகளும் மற்ற பகுதிகளிலும் திண்ணை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து திமுக கூட்டணி வெற்றிபெற உழைத்ததற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களாக கனிமொழி , அருண்நேரு, ஜெகத்ரட்சகன், பாலு, ஆ.ராசா ஆகியோர் இருப்பார்கள் என கூறினார்…

தொழிலாளர்கள் நலம் பெற , நல வாரியங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!