young woman Death: bows to protesters, police were sent to jail innocent Youth

இளம் பெண் இறப்பு வழக்கில் போராட்டக்காரர்களுக்கு பணிந்த போலீசார் அப்பாவியை சிறைக்கு அனுப்பினர். பாதிக்கப்ட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தில முத்துசாமி என்பவருக்கு சொந்தமான விவாசாய கிணற்றில் கடந்த மார்ச் 16ம் தேதி இளம் பெண்ணின் சடலத்தை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் மீட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் விவசாயி ஒருவரின் வயலில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் சட்டப்பிரிவு 174 கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இளம் பெண் ஐஸ்வர்யா (வயது 22) நாவலூர் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் பார்த்தீபன் (வயது 25) பெரம்பலூரில் வேலை பார்த்து வந்துள்ளார், ஐஸ்வர்யா துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இருவரும் ஒரே பேருந்தில் வேலைக்கு சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. மேலும், விசாரணையில் இறந்து போன ஐஸ்வர்யா கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காதலர்களான பார்த்தீபன் – ஐஸ்வர்யா ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார்கள் தரப்பிலும் பேச்சு வார்த்ததை நடத்தி சுமூகமான முறையில் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பார்த்தீபன் ஃபாரீனுக்கும், ஐஸ்வர்யா பஞ்சாலைக்கும் வேலைக்கு பெற்றோர்களால் பிரித் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயம்முத்தூரில் ஐஸ்வர்யா வேலை செய்த பஞ்சாலை நிறுவனத்தில் வீட்டிற்கு அனுப்பாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், பயந்த ஆலை நிர்வாகம், பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர். பின்னர், கடந்த 11ம்தேதி குரும்பலூர் வந்த ஐஸ்வர்யா அடுத்த நாள் 12ம் தேதி காலை பார்த்தீபனை சந்திப்பதற்காக நாவலூர் சென்றவர் அங்கு காதலன் பார்த்தீபனின் பெற்றோரிடம் பார்த்தீபனை பற்றி விசாரித்துள்ளார்.

அப்போது பார்த்தீபனின் தந்தை சின்னசாமி, உண்மையை தெரிவித்தால், ஐஸ்வர்யா விபரீதமாக ஏதோ செய்து கொண்டால் என்ன செய்வது என நினைத்தவர்கள் பார்த்தீபன் குறித்து கூறவில்லை. உயிருக்கு உயிராக காதலித்த காதலனை தேடி வண்ணம் ஐஸ்வர்யா நண்பகல் வரை அங்கேயே இருந்துள்ளார். பின்னர், ஐஸ்வர்யா பார்த்தீபனின் தந்தையிடம், பார்த்தீபனுக்கு நல்ல பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், முதல்நாளே 11ம் தேதியே வேப்பந்தட்டை விமான டிக்கட் புக்கிங் செய்துவிட்டு பெரிய வடகரையில் அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றும். 12ம் தேதி ஞாயிற்று கிழமை காலையிலேயே வெளிநாடு சென்றுவிட்டார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவை தேடி நாவலூர் சென்ற அவரது உறவினர்கள் பார்த்தீபனின் உறவினர்களிடம் ஐஸ்வர்யா குறித்து கேட்டு விசாரித்துள்ளனர். அப்போது தான் வெளிநாட்டிற்கு பார்த்தீபன் சென்ற உண்மையை கூறிய அவர்கள் டிக்கட் நகலை காண்பித்து தெரிவித்துள்ளனர். அதனால் காணமல் போன ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி குரும்பலூர் அருகே விவசாயி ஒருவரின் கிணற்றில் சடலமாக கிடைத்துள்ளார்.

பார்த்தீபன் மற்றும் அவரது நண்பர் மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் மகன் சரண்ராஜ் ஆகியோர் ஐஸ்வர்யா இறப்பிற்கு காரணமாக இருந்துள்ளார்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை 306 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் வழக்கில் தொடர்பில்லாத சரண்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கில் முன்னதாக இறந்த போன ஐஸ்வர்யா சாவிற்கு காரணமாக குற்றறவாளிகளை கைது செய்யக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தியது. இவர்களுக்கு பணிந்த காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக நினைத்து இந்த வழக்கில் சாட்சியாக வரும் சரண்ராஜ்-யை முக்கிய குற்றவாளியாக மாற்றி சிறையில் தள்ளி உள்ளது.

இந்த வழக்கில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி சோனல் சந்திரா , டி.எஸ்பி, கார்த்திகேயன் மற்றும் பெரம்பலூர் போலீசார் முறையான விசாரணையை நடத்தவில்லை.
ஆளும் கட்சி மற்றும் இதர கட்சி அரசியல்வாதிகளை திருப்தி படுத்துவதற்கு அப்பாவியை சிறைக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த வழக்கில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்கள்:

1. இறந்து போன ஐஸ்வர்யாவின் தலையில் முடியில்லாமல் போன காரணம் என்ன?

2. ஐஸ்வர்யா உபயோகித்த செல்போன் எங்கே?

3. ஐஸ்வர்யா போன் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்ட 12 பேரிடம் ஏன் அழைத்து விளக்கமோ விசாரணையோ நடத்தவில்லை,

4. இளம்பெண் ஐஸ்வர்யா, கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார இல்லை தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா, அப்படியானால் தூண்டியது யார்?

5. இளம் பெண் ஐஸ்வர்யா கவுரவ கொலை செய்யப்பட்டாரா , அப்படி செய்யப்பட்டிருந்தால் செய்தது பார்த்தீபனின் உறவினர்களா? அல்லது ஐஸ்வர்யாவின் உறவினர்களா? அல்லது கூலிப்படை வைத்து திட்டமிடப்பட்டு கொல்லப்பட்டாரா?

6. வறட்சியான காலத்தில் 5 அடிக்கும் குறைவான தண்ணீரில் எப்படி மூழ்கி இறக்க முடியம்,

7. வழக்கு திசை திருப்பபட்டுள்ளதா, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் கட்டப்பஞ்சாயத்து செய்து காதல் ஜோடிகளை பிரித்த சாதிய தலைவர்களை ஏன் கைது செய்யவில்லை!

8. சாட்சியான சரண்ராஜ் ஐஸ்வர்யாவிற்கு போன் கொடுத்து உதவியாதால் அது எப்படி கொலைக்கு தூண்டியதாக அமையும்,

9. வழக்கில் முக்கிய சாட்சியான சரண்ராஜ் ஏழை என்பதால் பணம்,பொருள் கொடுத்து குற்றவாளிகளை காப்பாற்ற ஒத்துக் கொள்ள வைக்ப்பட்டாரா,

10. பெண் காணாமல் போன மறுநாள் ஏன் ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை,

11. சமுதாயத்தில் சாதி கட்டமைப்பிற்கு மதத் தலைவர் அல்லது மதக்குருவிற்கு பிறகு குடும்பத் தலைவரே சாதிக்கும் தலைவராக வருகிறார். அப்படி இருக்கும் பட்சத்தில் ஐஸ்வாயாவின் உயிர் காதலனான பார்த்தீபன் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யாமல் விட்டுள்ள நோக்கம் என்ன? காரணம் என்ன ?

12. தடய அறிவியல் படியும், பிரேத பரிசோதனைப்படி தற்கொலைக்கு சாதமாக உள்ள நிலையில் காதலிக்காத மற்றும், காதலன், காதலியின் சமூகத்தை சாராத ஒருவர் எப்படி குற்றவாளியாக முடியும்…

13. இறப்பதற்கு முன்பு ஐஸ்வர்யா காதலன் பார்த்தீபனின் வீட்டில் இருந்த அவரது தந்தை சின்னசாமியிடம் பேசி உள்ளார். அங்கு என்ன நடந்தது. பார்த்தீபன் முதல் நாள் இரவே அவசரமாக வேப்பந்தட்டையில் ஏர் டிக்கட் புக் செய்து பெரியவடகரையில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கி வெளிநாடு செல்ல அவசியம் என்ன!

14. காதலன் பார்த்தீபன் வெளிநாட்டில் இருந்து ஐஸ்வர்யாவுடன் போனில் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பதிவு திருமணம் ஏதேனும் செய்துள்ளார்களா!

15. உயிருக்கு உயிராக காதலித்த ஜோடிகளை பிரித்து வைத்த போதும் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டுள்ளனர். பிரித்து வைத்த கட்டப் பஞ்சாயத்தார்கள் இதுவரை விசாரிக்கவில்லை ஏன். அதற்கு தலித் அமைப்புகளும் ஏன் முன்வரவில்லை. அப்போது கைமாறிய பணம் எவ்வளவு?

என்பதற்கான கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே இளம்பெண் ஐஸ்வர்யா இறப்பில் ஏற்பட்டுள்ள மர்மம் விலகும்…

இதே கேள்விகளுடன் சரண்ராஜின் பெற்றோர்கள் தங்கள் மகனின் மீது போலீசார், போராட்டக்காரர்களுக்கு பயந்து குற்றத் தொடர்பிலாத தனது மகனை கைது செய்து பொய் வழக்கில் சிறையில் அடைத்துள்ளனர். ஏழ்மையால் அன்றாடம் பிழைப்பு நடத்தும் நாங்கள் போலீசுக்கு எதிராகவும், நீதிமன்றத்தில் வாதடவும், வசதியும் இல்லை, வலிமையும் இல்லை என தெரிவித்த அவர்கள் அப்பாவியான தனது மகனை வழக்கில் இருந்து விடுவிப்பதுடன், அந்த வழக்கை முறையாக மீண்டும் விசாரிக்க உத்திரவிடக் கோரியும் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட டி.ஆர்.ஓ வேலு விசாரிப்பதாக உறுதியளித்தார்.

பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் விசாரணை அலட்சியத்தால் அப்பாவி ஏழை இளைஞன் சிறைக்கு அனுப்பபட்டுள்ளான். நீதியை நிலை நாட்டவும், ஏழை எளிய, ஆதவரற்ற மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய வருவாய் துறை, காவல் துறையினர் அரசியல் அமைப்பு சட்டத்தை மறந்து விட்டனர்.

காந்தியடிகள் கூற்றுப்படி ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்டாக்கூடாது என்பதாகும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!