Young woman hangs herself in private school in Perambalur? Police investigation!
பெரம்பலூர் – துறையூர் சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் பின்புறம் உள்ள பெண்கள் விடுதியில் இளம்பெண் ஒருவர் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். .
இன்று சுமார் மதியம் 1.00 மணியளவில் பள்ளி துப்புரவு பணியாளர் விஜயலட்சுமி என்பவர் விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில்,
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் அப்பெண் சுபாஆடலரசி வயது (26) என்றும், விழுப்புரம் மாவட்டம் திருவண்ணை நல்லூர் காந்தி நகரை சேர்ந்த திருவள்ளுவன் என்பவரது மகள் என்றும் தெரிய வந்தது.
மேலும் ஒரு ஆண்டாக அலுவலக உதவியாளராக பணி செய்து கொண்டே, அங்கு உள்ள பெண்கள் விடுதியில் காப்பாளராகவும் பணி செய்தும் வந்துள்ளார்.
கடந்த 16.10.2023 ஆம் தேதி தனது அண்ணனின் திருமணத்தை முன்னிட்டு விடுமுறைக்கு சென்றவர், மீண்டும் பள்ளியில் ஆயுத பூஜை கொண்டாட
நேற்று பள்ளிக்கு வந்துள்ளார்.
இன்று உடன் பணி செய்பவர்களுடன் 11.30 மணி வரை இருந்துள்ளார். மதியம் சுமார் 1 மணியளவில் பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் விஜயலட்சுமி என்பவர் விடுதியை சுத்தம் செய்வதற்காக கதவை திறந்து பார்த்த போது சுபாஆடலரசி துப்பட்டாவால் மின்விசிரியில் தூக்கு
மாட்டி இறந்தது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் சுபாஆடலரசி கைப்பட எழுதப்பட்டதாக கூறுப்படும் கடிதத்தில், தீராத மன உளைச்சல் காரணமாகவும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் நான் இம்முடிவை எடுத்துள்ளேன் இதற்கு வேறு எவரும் காரணம் அல்ல என பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு 23.10.23 என தேதியை குறித்தும் வைத்துள்ளார்.
அவரது உறவுக்காரரான அன்பின் பொன்மொழி என்பவரை காதலித்து வந்துள்ளதாகவும் அவருக்கு தற்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடைந்தால் மகாதேவன், அடையாவிட்டால் மரணதேவன் என காதலனை அடைய முடியவில்லை என்ற ஏக்கத்தில் இளம்பெண் இறந்த சம்பவம் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.