Youth hacked to death in Perambalur Mystery figures hysteria; Police investigation !!
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பழைய வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொடூர கொலை செய்யப்பட்டார். இது தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வாலிபரை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனையில் உடலை கிடத்தி உள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் பெரம்பலூர் சங்குபேட்டை அருக உள்ள 13 வார்டிற்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் செங்கோட்டுவேல் என தெரிய வந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை தீவிரப்படுத்தி கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.