Yuvraj’s court hearing disqualification was postponed to Dec. 31

File Copy


நாமக்கல் : கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு விசாரணையை வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ் (வயது 23). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நாமக்கல் சிபிசிஐடி போலீஸார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி யுவராஜை போலீசார் கைது செய்து நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட் தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரனைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் தனபால் வழக்கு விசாரணையை வரும் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் வழக்கு விசாரணைக்காக நாமக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!