For the first time in Tamil Nadu, tribal certificate to the Narikkurwar community: Perambalur Collector thanked by offering sweets.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலத்தூர் வட்டம், காரை பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு தமிழ் நாட்டில் முதன் முறையாக பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கியதற்காக கலெக்டர் கற்பகம், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்திய பால கங்காதரன் முன்னிலையில் நேரில் சந்தித்து இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகர் பகுதியில் 120 குடும்பங்களும், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் பகுதியில் 110 குடும்பங்களும் , குன்னம் வட்டம், நமையூர் நரி ஓடை பகுதியில் 20 குடும்பங்களும் என சுமார் 250 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர்.

1989 ஆம் ஆண்டு 250-க்கும் மேற்பட்ட பிரிவினரை உள்ளடக்கிய பி.சி வகுப்பில் இருந்து நரிக்குறவர்கள் உள்ளிட்ட சுமார் 100 பிரிவினரை எம்.பி.சி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் நரி குறவர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன் மூலம் மட்டுமே கல்வி வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும் என நம்பி வந்தனர். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக மத்திய அரசு இதற்கான ஒப்புதலை அளித்த நிலையில், தமிழ்நாடு அளவில் உள்ள நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் சான்றிதழ் பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

அதனை முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை ஊராட்சி க்குட்பட்ட மலையப்ப நகர் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணியன் மகள் கோகிலா (19) என்ற மாணவிக்கு எம்.பி.சி .சான்றிதழிலிருந்து மாற்றி, எஸ்.டி நரிக்குறவர் என்கிற பழங்குடியினர் சாதிச்சான்றிதழை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்தப்பகுதில் வசிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலை நாடுனர்கள் என 15 க்கும் மேற்பட்ட நிக்குறவர் இன மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகள் கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து நன்றியுடன் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியினை தெரிவித்தனர். மேலும் தங்களின் கோரிக்கையினை நிறைவேற்றி தந்த அரசுகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் போட்டித்தேர்வுகள் எழுதுவதற்கு வசதியாக சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடடிவக்கை எடுத்த நிர்வாகத்திற்கும் நன்றியினை தெரித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!