LKG at government schools Minister of Education announced in the Legislative Assembly Sengottaiyan!
ஈரோடு அரசு மருத்துவமணையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் 40 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவை பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளிகளில் 5வயது நிறைவடைந்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளதால் எல்.கே.ஜி/ யு.கே.ஜி வகுப்புகள் துவங்குவது குறித்த அரசின் முடிவை சட்டமன்றத்தில் அறிவிக்க இருப்பதாக கூறினார்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் பள்ளிகளில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை தெரிவிக்க அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார்.
தமிழக அரசு நீர் நிலை மேம்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், குடிமராமத்து திட்டம் சிறப்பாக அமைந்திருப்பதாக கூறினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன், மாவட்ட ஆட்சியர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.