People complain of mercenaries threatening to hunt down sand molders
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் அளவிற்கு அதிகமான மணல் கொள்ளைகள் நடந்து வருவதாகவும், அது குறித்து தகவல் தெரிவிப்பவர்கள், கொள்யையை தடுப்பவர்கனை கூலிப்படையை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமியிடம் தாராபுரம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
குறிப்பாக தாராபுரம் அருகே உள்ள கவுண்டயன் வலசு சங்கரண்டாம் பாளையம் அலங்கியம் ஏர்ணா மேடு ஆகிய பகுதிகளிள் தினந்தோறும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. கூலிப்படையினரை வைத்து மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கடத்தலை தடுக்க நினைக்கும் நபர்களை கூலிப்படையினர் மர்மமான முறையில் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும் இதுவரையில் ஆயிரக்கணக்கான லோடுகள் திருடப்பட்டது உள்ளது.
சம்மந்தபட்ட வருவாய்துறை அதிகாரிகள், மணல் கடத்ததும் கும்பலுடன் நேரடி தொடர்பில் உள்ளார்கள், சனி மற்றும் ஞாயிறு இரு தினங்களிள் அதிகபடியான மணல் கொள்ளை நடைபெறுகிறது என்றும், புகார் தெரிவிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்களுடைய தொலைபேசி சுவிட்சுஆப் செய்யப்பபட்டுள்ளது.
என்றும் மணல் கொள்ளைக்கு துணைபோகும் அதிகாரிகள் மீதும் மணல் கடத்தும் நபர்கள் மற்றும் மணல் கடத்தலுக்கு பட்டா நிலங்களை வழங்கும் நபர்களின் மீதும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என தாராபுரம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கபட்டுள்ளது.