Perambalur: Drinking water is being distributed to the public of V. Kalathur Rayappa Nagar: Veppanthatta BDO Selvamanian information.

கடந்த ஏப்.28ம் தேதி அன்று பெரம்பலூர் அருகே உள்ள வி.களத்தூர் ராயப்ப நகரில் குடிநீர் இல்லாமல் காலனி மக்கள் கடும் அவதிப்படுவதாக காலைமலரில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, ராயப்ப நகரில் ஆழ்துளை கிணறுடன் சிமெண்ட் தொட்டி பழுது நீக்கம் செய்யும்
பணிகளும், போர்வெல் சரி செய்யும் பணிகளும் கலெக்டர் கற்பகம் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
ஆர்.ஓ சிஸ்டம் பழுது நீக்கம் செய்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதியதாக வி.களத்தூர் மேலத்தெரு ஆழ்துளை கிணறு மற்றும் பைப் லைன் அமைத்து ராயப்ப நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது, என வேப்பந்தட்டை பிடிஓ செல்வமணியன் தகவல் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!