Perambalur: Ex-MLA RTR who is in the hearts of the losing people! Vellaru joint drinking water scheme for 73 villages from Pannekonam! Chief Minister M.K.Stalin started the video conference!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை, நெம்மேலியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராம மக்களுக்கான குடிநீர்தேவைக்காக ரூ.22.84 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வெள்ளாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
07.03.2018 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டில் வெள்ளாற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த 73 கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசு ஆணை எண்.23 / நாள்: 13022020-ல் ரூ.22.84 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் நபார்டு வங்கி நிதியுதவி மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் பணிகள் நடைபெற்று வந்தது.
இத்திட்டத்தின் தற்போதைய (2020) இடைக்கால/2035) மற்றும் உச்சகட்ட (2050) மக்கள் தொகை முறையே 62386, 74589 மற்றும் 87270 ஆகும். மேலும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம். இடைக்கால மற்றும் உச்சகட்ட குடிநீர் தேவை முறையே 3.47 மற்றும் 405 மில்லியன் லிட்டர் ஆகும்.
இத்திட்டத்தில் நாளொன்றுக்கு தேவையான 4.05 மில்லியன் லிட்டர் குடிநீரை பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பென்னகோணம் அருகில் வெள்ளாற்றில் அமைக்கப்பட்ட நான்கு நீர் உறிஞ்சி கிணறுகள் மூலம் 61 குடியிருப்புகளுக்கு வழங்கவும் மற்றும் ஏற்கனவே செயலில் உள்ள 645 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள உபரி நீரை 12 குடியிருப்புகளுக்கு வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
63 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குதல் :
4 நீர் உறிஞ்சி கிணறுகளின் மூலம் பெறப்படும் நீர் புதிதாக அமைக்கப்பட்ட 6.00 மீட்டர் விட்டமுள்ள நீர் சேகரிப்பு தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து 7.62 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் ஏற்கனவே உள்ள 5 தரைமட்ட தொட்டிகளிலும் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தரைமட்ட தொட்டிகளிலும் நீர் சேகரிக்கப்படும். அங்கிருந்து 39.54 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் ஏற்கனவே உள்ள 71 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் புதியதாக கட்டபட்டுள்ள 5 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படும். பிறகு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் இருந்து ஏற்கனவே பயனில் உள்ள 109.54 கி.மீட்டர் நீள பகிர்மான குழாய் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
12 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குதல்:
மேலும், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் 12 கிராமங்களுக்கு 645 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஏற்கெனவே உள்ள 8 தரைமட்ட தொட்டிகளுக்கு நீர் உந்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து ஏற்கெனவே பயனில் உள்ள 12 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படும். பிறகு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் இருந்து ஏற்கெனவே பயனில் உள்ள 18 கி.மீட்டர் நீள பகிர்மான குழாய் மூலம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.
அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சரால் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ள பெண்ணக்கோணத்தில் கலெக்டர் கற்பகம், நேரில் பார்வையிட்டு நீர் பகிர்மானத்தை இயக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான சி. ராஜேந்திரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் எஸ். எழிலரசன், நிர்வாகப் பொறியாளர் வி.லோகநாதன், உதவி நிர்வாகப் பொறியாளர் எஸ்.சக்திவேல், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வீரமலை, ஒப்பந்தாரர் பெண்ணகோணம் ஊராட்சித் தலைவர் ஜெயலட்சுமி, ஊராட்சித் செயலளர் (பொ) சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, அதிமுக சார்பில் 2வது முறை போட்டியிட்ட ஆர்.டி. ராமச்சந்திரன் லப்பைக்குடிக்காடு மேற்கு பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த போது, அங்கிருந்த வாக்காளர்கள் அவரிடம், லப்பைக்குடிக்காட்டில் கொண்டு வந்துள்ள வெள்ளாறு குடிநீர்த் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் வாக்களிப்பதாக தெரிவித்தனார். ஆனால், ஆர்.டி.ராமச்சந்திரன் அவர்களிடம், நான் பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற விரும்பவில்லை. வறட்சியான பகுதியில் அப்பகுதி மக்களுக்கு என் நினைவாக நல்ல குடிநீர் கிடைக்கட்டும். நீங்கள் வாக்களித்தால் 2வது முறை எம்.எல்.ஏ ஆவேன், சிறப்பான வேறு திட்டங்களை கொண்டு வருவேன், நீங்கள் வாக்களிக்காவிட்டால் நல்ல பிசினஸ்மேனாக மாறுவேன் என அப்போது அங்கேயே தெரிவித்தார்.
அதே நாளில், அன்றைய தினம், அதே நேரத்தில், அதே ஊரான லப்பைக்குடிக்காடு கிழக்கு பள்ளிவாசலில் தற்போதைய தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சரான சிவசங்கர் வாக்குகளை சேகரித்தார். ஆனால், மேற்கு பள்ளிவாசலில் கேட்ட கோரிக்கையையே கிழக்கு பள்ளி வாசலிலும், வாக்களர்கள் முன்வைத்தனர். அதற்கு அமைச்சர் சிவசங்கர் முயற்சி செய்வதாக தெரிவித்தார். தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
ஆனால், இந்த வெள்ளாறு திட்டம் கொண்டு வந்த போது, பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் லப்பைக்குடிக்காட்டில் நடந்தது. கலெக்டர் வெங்கடபிரியா உள்ளிட்ட அதிகாரிகள் திறமாக செயல்பட்டனர். லப்பைக்குடிக்காடு மக்கள் வாக்களிக்காவிட்டால் தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்தும், ஆர்.டி.ராமச்சந்திரன் திட்டத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்ததால் இன்று வெள்ளாறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பயன் பெறும் 73 கிராமங்களை சேர்ந்த மக்கள் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரனை மனதார பாராட்டுகின்றனர்.
மசூதியில் போட்டி போட்டு, வாக்குகள் சேகரித்த குன்னம் தொகுதி வேட்பாளர்கள்!