Tuticorin on the road and opened fire in protest against the arrest of the picketers in Tirupur
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மிக மோசமான கழிவு ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது. தங்களுடைய உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியை சார்ந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெருமாநல்லூர் சாலை புஷ்பா ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.