Tuticorin Sterlite affair: protest demonstration on behalf of Tamilar marumalarchi kazhagam in Tirupur
தூத்துக்குடியில் ஜனநாயக ரீதியாக ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்திய எடப்பாடி தலைமையிலான காவல்துறையை கண்டித்து திருப்பூரில் தமிழர் மறுமலர்ச்சி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏராளமானோர் பங்கேற்பு.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி 100 வது நாள் அறவழியில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுகொடுப்பதற்காக ஊர்வலமாக சென்றவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியும் கடுமையான தடியடி நடத்தியதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தமிழர் மறுமலர்ச்சி கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒருகோடி ரூபாய் நஷ்ட ஈடாக தரவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம்,மாநில செயலாளர் ராம்குமார்.உற்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.