Tuticorin The Tamil Nadu Police Department has been functioning as a hired actress: Mutharasan interview
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திருப்பூர் : ஆலை நிர்வாகத்திற்காக மாநில அரசு சார்பில் துப்பாக்கி சூட்டிற்காக தனி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது .அப்போது மாவட்ட ஆட்சியரோடு பயிற்சி பெற்றவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது .
தூத்துக்குடியில் 22 ஆம் தேதி போராட்டம் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததே , ஆனால் எங்களை உள்ளே அனுமதிக்காத நிலையிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வாகணங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டன , அவை போலிசாரால் வைக்கப்பட்டதாகவே அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் உட்பட அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது .
5 நாட்களாகியும் பிரதமர் அனுதாபமோ , ஆறுதலோ தெரிவிக்கவில்லை , இதிலிருந்தே மோடி அரசும் , எடப்பாடி அரசும் சேர்ந்து செய்த சதித்திட்டம் எனதெரிகிறது .
இச்சம்பவத்தை கண்டித்து போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது , மருத்துவமனை சென்றதற்காக எங்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது . இதற்காக தூக்குதண்டனை கொடுத்தால் கூட ஏற்றுக்கொள்வோம் .
ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் விசாரனை வேண்டாம் , பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரனை வேண்டும் .
தூத்துக்குடி சம்பவத்தில் தோற்றுப்போண அரசு பதவி விலக வேண்டும் .
மத்தியரசு தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதி எதையும் செய்யவில்லை , மாறாக மதக்கலவரம் , பாலியல் வன் கொடுமை அதிகரிப்பு ஆகியவையே 4 ஆண்டு சாதனை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆடியோ வெளியீடு தூத்துக்குடி சம்பவத்தை மறைப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது, என பேட்டியில் தெரிவித்தார்.