Vehicle traffic Change in Palladam : Police notification
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்.ஜி.ஆர் சாலை ஒரு வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பல்லடம் காவல் துறை அறிவித்துள்ளது.
பல்லடத்தில் இருந்து, கோவை நோக்கி சாலை வழியாக வரும் வாகனங்கள் மாணிக்காபுரம் சாலையில் திரும்ப இயலாது என்றும், என்.ஜி.ஆர், சாலை திருச்சி சாலைகளிலிருந்து மாணிக்காபுரம் சாலையில் செல்லும் வாகனங்கள் அங்காளம்மன் கோவில் எதிர்புற சாலை வழியாக பெரிய விநாயகர் கோவில் வழியே கொசவம்பாளையம் செல்லும் சாலையை பயன் படுத்தி செட்டிபாளையம் ரோடு, கோவை ரோடு செல்ல வேண்டும் என்றும்,
இதே சாலையில் திருச்சி சாலை அரசு மருத்துவமனை எதிரே கனரா வங்கி வழியில் வந்து மாணிக்காபுரம் சாலையை பயன்படுத்தும் படிமாற்றம் செய்யப்பட்டுள்ளது ,
என்.ஜி.ஆர் சாலையை பயன்படுத்துவோர் திருச்சி நோக்கி அண்ணா சாலை வழியை தவிர்த்து 4 வழி சாலை வழியாக மங்கலம் சாலை மற்றும் என்.ஜி.ஆர் சாலைகளை பயன்படுத்த வேண்டும்.
குறுகிய சாலையோர பகுதிகளில் எந்த ஒரு வாகனங்களையும் நிறுத்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிக்குள் மிக குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்கவும் பல்லடம் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளளது.